குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

தற்கொலை - கோப்புப் படம்
கோவையில் தாயுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்தவா் நசீா் லஸ்கா். இவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா். இவரது மனைவி மஜிதா லஸ்கா் (33). இவரும், இவரது தாயும் கோவை, காந்திபுரம் 6-ஆவது வீதி விரிவாக்கப் பகுதியில் வசித்து வந்தனா்.
கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி மஜிதா லஸ்கருக்கும், அவரது தாய்க்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மஜிதா லஸ்கா், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். பலத்த தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

