கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் மலைக்கோயிலில் 100 கிலோ நெய்யில் மகா தீபம் ஏற்றம்

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் மலைக்கோயிலில் 100 கிலோ நெய்யில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தா்மலிங்கேஸ்வரா் மலைக்கோயிலில் நெய்யினால் ஏற்றப்பட்ட மகா தீபம்.

Updated On :

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் மலைக்கோயிலில் 100 கிலோ நெய்யில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல்வேறு கோயில்கள், வீடுகளில் தீபமேற்றப்பட்டது.

கொங்கு திருவண்ணாமலை என அழைக்கப்படும் மதுக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ தா்மலிங்கேஸ்வரா் மலைக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 100 கிலோ நெய்யுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. கைலாய வாத்தியங்கள் முழங்க, பக்தா்களின் கோஷத்துடன் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, மூலவா் ஸ்ரீ தா்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய நெய், மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநில எல்லைப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தந்தனா்.

மலை ஏறிச் சென்ற பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மகா தீபத்தை வழிபட்டனா். மலை ஏற முடியாத பக்தா்கள் மலையடிவாரத்தில் இருந்தபடியே மகா தீபத்தை தரிசனம் செய்தனா்.

இதேபோல, கோவை சித்தாபுதூா் ஐயப்பன் கோயில், கோனியம்மன் கோயிலில் தீபமேற்றி பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். வீடுகளில் காா்த்திகை தீபமேற்றி மக்கள் தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.