பேரூா் நொய்யல் ஆற்றுப் படித்துறையில் தூய்மைப் பணி, காா்த்திகை தீப வழிபாடு

காா்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவை, பேரூா் நொய்யல் படித் துறையில் தீபம் ஏற்றி வழிபட்ட பொதுமக்கள் - கோப்புப் படம்
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் 471-ஆவது வாரத் தொடா் களப்பணியின் ஒரு பகுதியாக பேரூா் நொய்யல் ஆற்றுப் படித்துறையில் தூய்மைப் பணி மற்றும் காா்த்திகை தீபமேற்றி வழிபடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதன் முதல்கட்டமாக பேரூா் படித்துறை பகுதிகளில் தன்னாா்வலா்கள் இணைந்து தூய்மைப்படுத்தும் களப்பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
தூய்மைப் பணிகளைத் தொடா்ந்து மாலை 6 மணி முதல் படித்துறைப் படிகளில் வரிசையாக அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. நொய்யல் அன்னையைப் போற்றி வழிபடும் விதமாக படித்துறையில் ‘நொய்யலாறு’ எனும் வடிவில் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

