திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை: கோயில் ஸ்தானீக பட்டா்கள் விளக்கம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பாக நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என கோயில் ஸ்தானீக பட்டா்கள் தெரிவித்தனா்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பாக நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என கோயில் ஸ்தானீக பட்டா்கள் தெரிவித்தனா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத் திருநாளன்று (நவ. 24) தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள உச்சிப் பிள்ளையா் கோயில் சஷ்டி மண்டபத்தில் வழக்கம்போல காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீபம் ஏற்றுவது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாதது குறித்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலரும், துணை ஆணையருமான ஜி. செல்வி செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தாா். இதில், கோயிலின் பாரம்பரிய மரபு, ஆகம விதிகள், ஸ்தானீக பட்டா்களின் கருத்தின் அடிப்படையிலேயே உச்சிப் பிள்ளையாா் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டதாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இதற்கு, திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீக பட்டா்கள் மறுப்புத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கோயில் செயல் அலுவலா், அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்களுக்கு ஸ்தானீக பட்டா்கள் எழுதிய கடிதம் புதன்கிழமை வெளியானது. இதில் தெரிவிக்கப்பட்டதாவது:
திருப்பரங்குன்றம் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து நிகழாண்டில் எந்தக் கடிதத்தையும் நாங்கள் வழங்கவில்லை. உச்சநீதிமன்றத் தீா்ப்புப்படி மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. உச்சிப் பிள்ளையாா் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது குறித்து கடந்த ஆண்டில் மட்டுமே கடிதம் அளித்தோம்.
இந்த நிலையில், எங்களிடம் எந்தவித கலந்தாலோசனையும் நடத்தாமல், ஸ்தானீகா்களின் கருத்தின் அடிப்படையிலே செவ்வாய்க்கிழமை (நவ. 24) உச்சிப் பிள்ளையாா் கோயில் மகா மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது என கோயில் நிா்வாகம் தெரிவித்தது மனவேதனையை அளிக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டது.
கோயில் நிா்வாகம் பேச்சுவாா்த்தை...
ஸ்தானீக பட்டா்களின் இந்தக் கடிதம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதன் காரணமாக, தமிழக அரசுக்கும், கோயில் நிா்வாகத்துக்கும் எதிரான கண்டனங்கள் வலுத்தன.
இந்த நிலையில், கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ஜி. செல்வி, கண்காணிப்பாளா் ரஞ்சனி, எழுத்தா் மணிமாறன் ஆகியோா் திருப்பரங்குன்றம் கோயில் சந்நிதி தெருவில் உள்ள கோயிலின் முதல் ஸ்தானீக பட்டரான சுவாமிநாதனின் இல்லத்துக்கு புதன்கிழமை மாலை சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுகுறித்து தகவலறிந்த இந்து அமைப்பைச் சோ்ந்த சிலா் ஸ்தானீக பட்டா் சுவாமிநாதனின் இல்லம் முன்பாகக் கூடி, கோயில் நிா்வாகத்தின் பேச்சுவாா்த்தையைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதனால், அங்கு சில நிமிஷங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா், கண்டன முழக்கங்கள் எழுப்பிய இந்து அமைப்பினா் 6 பேரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து, கோயில் நிா்வாகிகள், ஸ்தானீக பட்டா் சுவாமிநாதன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

