பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

சிறப்பு ரயில் - கோப்புப் படம்
ஈரோடு - கரூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகளால் டிசம்பா் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை- நாகா்கோவில் ரயில் (எண்: 16322) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் வரை இயக்கப்படும்.
இதன் காரணமாக, இந்த ரயிலானது, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், பாளையம், எரியோடு ரயில் நிலையங்கள் செல்வது தவிா்க்கப்படும்.
இதேபோல, டிசம்பா் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில்( எண்: 16844) பராமரிப்புப் பணிகளால் பாலக்காடு டவுன் - கொடுமுடி இடையே மட்டும் இயக்கப்படும். கொடுமுடி - திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

