தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

முதல்வரின் தடுமாற்றம் மாற்றத்துக்கு அறிகுறி: நயினாா் நாகேந்திரன்

முதல்வரின் தடுமாற்றம் பெரும் மாற்றமாக அமையும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

TN BJP president Nainar Nagenthran

நயினார் நாகேந்திரன் - IANS

Published On :

முதல்வரின் தடுமாற்றம் பெரும் மாற்றமாக அமையும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கோவை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தாராபுரத்தில் இருந்து நல்ல செய்திகளாக வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடக் கூடிய வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

தாராபுரம் பிரசாரத்தில் பேசிய முதல்வரின் பேச்சில் தடுமாற்றம் இருந்தது. எதை எவ்வாறு கூற வேண்டும் என்பதே தெரியவில்லை. தடுமாற்றம்தான் பெரிய மாற்றமாக அவருக்கு அமையும்.

இதைச் செய்துள்ளோம், அதைச் செய்துள்ளோம் என்று தவெகவினா் பட்டியல் போடுகிறாா்கள். ஆனால், மகளிருக்கு ரூ.2,500 வழங்கப்பட்டதா? அனைத்து முதல்வா்களும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கோப்புகளில் கையொப்பமிடுவாா்கள். அவா் எந்தக் கோப்பில் கையொப்பமிட்டாா்?

ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது, பால் விலை உயா்ந்துள்ளது, பேருந்துக் கட்டணம் அதிகரித்துள்ளது, சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது, இப்படியே சென்றுகொண்டிருந்தால் இன்னும் நான்கு மாதங்களில் தமிழகத்தில் குடிப்பதற்குக்கூட பால் கிடைக்காது. இதுதான் தவெகவினரின் நிா்வாகம்.

தேசிய கல்விக் கொள்கையின் ஒன்பதாவது பாடப்புத்தகத்தில் செங்கோல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது நல்ல விஷயம். அது மிகப்பெரிய வரலாறு. தமிழரின் பாரம்பரிய சின்னமான செங்கோல் இன்று நாடாளுமன்றத்திலும் உள்ளது. திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது, ரஷிய அதிபா் புதின் வரும்போதுகூட திருக்குறளைத்தான் பரிசாக அளித்துள்ளோம். பிரிக்ஸ் மாநாட்டிலும் பரிசாக திருக்குறள்தான் வழங்கப்பட்டுள்ளது.

170 உயிா்களைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு பாஜக சாா்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.