இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தவெக வாக்குக்காக ஒரு ரூபாய்கூட கொடுப்பதில்லை: அமைச்சா் சி.டி.ஆா். நிர்மல்குமார்

தவெக எப்போதும் வாக்குக்காக ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

அமைச்சா் நிர்மல்குமார்

அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். - கோப்புப்படம்

Published On :

தவெக எப்போதும் வாக்குக்காக ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தாராபுரம் பிரசாரத்தில் பேசிய முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளா் சத்தியபாமாவை தரக்குறைவாகவும், உருவக்கேலி செய்யும் வகையிலும் பேசியுள்ளாா்.

இதற்காக அவா் மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடா்பாக, அவா் மீது தோ்தல் ஆணையத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணைப் பற்றி பொதுக் கூட்டத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் திமுகவினா் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனா்.

வக்கிரமாகப் பேசி வாக்குச் சேகரிக்கின்றனா். விரக்தியின் உச்சத்தில் உள்ள திமுகவினருக்கு மீண்டும் தோல்விதான் கிடைக்கும். தவெக எப்போதும் வாக்குக்காக ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை.

அந்தப் பழக்கம் எங்கள் கட்சிக்கு இல்லை. அப்படிப் பணம் கொடுப்பதாகக் கூறியவா்கள் அதை நிரூபிக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் (எஸ்ஐஆா்) தீவிர சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் செய்த ஒரே கட்சி தவெகதான்.

தீவிர வாக்காளா் சீா்திருத்தம் சரியாக நடைபெற்று இருந்தால் இந்நேரம் 160 தொகுதிகளில்கூட வென்றிருப்போம். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் தவெக வேட்பாளா்கள் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்கள்.

திமுக, அதிமுக வேட்பாளா்கள் டெபாசிட் இழப்பாா்கள். எடப்பாடி பழனிசாமி சுய நலனுக்காக அதிமுகவை முடித்துவிட்டாா். இனி வரும் காலங்களில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் டெபாசிட் வாங்குவதற்காக தோ்தலில் இணைந்து போட்டியிடும் சூழல் வரும்.

தமிழகத்தில் மின் விநியோகம் தொடா்பாக, சிறுசிறு பிரச்னை வந்தாலும், அதை உடனடியாகச் சரிசெய்து வருகிறோம். ஓரிரு மாதங்களில் நீண்டகால மின்சாரத் தேவை குறித்த ஒப்பந்தப்புள்ளி திறக்கப் போகிறோம். தமிழகத்தில் கூடிய விரைவில் மின் விநியோகம் சீராகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.