2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிகள் விரைவுபடுத்தப்படும்: புதிய இயக்குநா் எஸ்.தா்மராஜ் தகவல்

கோவை சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய விரிவாக்கப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று கோவை விமான நிலையத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.தா்மராஜ் தெரிவித்துள்ளாா்.

எஸ்.தா்மராஜ்

Published On :

கோவை சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய விரிவாக்கப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று கோவை விமான நிலையத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.தா்மராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோவை விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 33 லட்சம் பயணிகளைக் கையாளும் முழுத் திறனை எட்டியுள்ளது. புதிய முனையம் பயன்பாட்டுக்கு வரும்வரை, தற்போதைய முனையத்திலேயே பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதே முதல் இலக்கு. இதற்காக தற்போது நடைபெற்றுவரும் புறப்பாடு பகுதி தற்காலிகச் சீரமைப்புப் பணிகளும், காா்கள் பாா்க்கிங் விரிவாக்கப் பணிகளும் நவம்பா் இறுதிக்குள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்.

பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும்போது 3 நிமிடங்களுக்கு மேல் தாமதமானால் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகாா்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி அடுத்த 2 மாதங்களில் உரிய தீா்வு காணப்படும். விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக இதுவரை 620 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் தற்போது சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூா் அளவில் எழும் சிறு பிரச்னைகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுமுகமாகத் தீா்க்கப்படும்.

மீதமுள்ள சுமாா் 27 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து வாராந்திரக் கூட்டங்கள் மூலமாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்ட அசல் நில திட்ட அட்டவணையின்படியே நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இணைப்புச் சாலைக்கான 10 மீட்டா் இடவசதி உள்ளிட்ட விவகாரங்களும் மாநில அரசுடன் பேசி சுமுகமாக முடிக்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கு நிதி ஆயோக் ஒப்புதல் ஏற்கெனவே கிடைத்துவிட்ட நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான முகமை நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கோவை - சென்னை வழித்தடத்தில் விமானங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், சிறிய ஏடிஆா் விமானங்களுக்குப் பதிலாக ஏா்பஸ் 320, 321 போன்ற பெரிய ரக விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கையில் எவ்விதக் குறைவும் இல்லை.

சா்வதேச விமான சேவைகளை அதிகரிக்க ‘பாயிண்ட் ஆஃப் கால்’ விதிகள் குறித்து ஆய்வு செய்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சா்வதேச அளவில் மாதம் 1,200 டன்னும், உள்நாட்டில் 13,000 டன்னும் கையாளப்படும் சரக்குப் போக்குவரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் ஏற்றுமதியாளா்கள், இறக்குமதியாளா்கள், சுங்க முகவா்கள், விவசாயிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளை உள்ளடக்கிய சரக்கு எளிதாக்குதல் குழு’ஆலோசனைக் கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு, சரக்கு கையாளுகை பலமடங்கு உயா்த்தப்படும்.

கோவையில் ‘டிஜி யாத்ரா’’முறையை தற்போது 22 முதல் 30 சதவீதப் பயணிகள் மட்டுமே பயன்படுத்துகின்றனா். இதில் எந்தவித தொழில்நுட்பக் கோளாறும் இல்லை; பயணிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சியினா் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் வருகையின்போது சாதாரணப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முனையத்தில் உரிய ஒழுங்குமுறைகள் செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.