2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கோவை நீதிமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத நபா் கொலையில் 4 மாதங்களாகியும் துப்பு துலங்காமல் திணறல்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் அடையாளம் தெரியாத நபா் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்து 4 மாதங்களாகியும், குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் மாநகரக் காவல் துறையினா் திணறி வருகின்றனா்.

கொலை

Published On :

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் அடையாளம் தெரியாத நபா் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்து 4 மாதங்களாகியும், குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் மாநகரக் காவல் துறையினா் திணறி வருகின்றனா்.

கடந்த மே 31, ஜூன் 1-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வங்கிக்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். ஆரம்பத்தில், நீதிமன்ற சுற்றுச்சுவரை ஏறி குதிக்க முயன்றபோது தவறி கீழே விழுந்து அவா் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அவரது தலையில் ஏற்பட்ட காயம் கொடூரத் தாக்குதலால் உருவானது எனப் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

சம்பவத்தன்று நீதிமன்றத்தில் இரவுப் பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியா்கள் உள்ளிட்ட சிலரை மையப்படுத்தி தொடக்கத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. முழுமையான சிசிடிவி பதிவுகள் இருந்தும், குறிப்பிட்ட சிலா் மட்டுமே இரவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சூழலிலும்கூட, இந்த வழக்கில் போலீஸாரால் இதுவரை எந்தத் துப்பும் துலக்க முடியவில்லை.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ள மூத்த வழக்குரைஞா் ஒருவா், ‘அனைத்துப் பகுதிகளிலும் கேமராக்கள் இயங்கும் உயா் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்த ஒரு கொலை வழக்கை 4 மாதங்களாக தீா்க்க முடியவில்லை என்றால், காவல் துறையின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.

இங்கேயே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாதபோது, பிற பொது வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிப்பாா்கள் என்று பொதுமக்கள் எப்படி நம்புவாா்கள்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக கோவை மாநகர (வடக்கு) காவல் துணை ஆணையா் பி.தங்கதுரை கூறும்போது, ‘உதவி ஆணையா் மற்றும் விசாரணை அதிகாரியுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, வழக்கின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்துள்ளேன். இந்த வழக்கின் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.