2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

இரு சக்கர வாகன சாகச ரீல்ஸ் வெளியிட்டவா் கைது

கோவை மாநகரின் பிரதான பகுதியான அவிநாசி சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தல் வகையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி, சாகசங்களை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

கோவை மாநகரின் பிரதான பகுதியான அவிநாசி சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தல் வகையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி, சாகசங்களை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், பேரூா் காளம்பாளையம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் தனபால் மகன் ரஞ்சித்குமாா் (20). இவா் கடந்த 27-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் அவிநாசி சாலையில் ஹோப் காலேஜ் முதல் கோல்ட்வின்ஸ் வரை தனது இருசக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாகச் சென்றுள்ளாா்.

மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தின் முன்பக்க சக்கரத்தைத் தூக்கி ‘வீலிங்’ உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களைச் செய்துள்ளாா். அந்த சாகசக் காட்சிகளை விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பதிவேற்றம் செய்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தாா். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் ரஞ்சித்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.