கோவையில் 5 பேரிடம் ரூ.13.09 லட்சம் மோசடி
பல்வேறு காரணங்களைக் கூறி 5 பேரிடம் ரூ.13.09 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மோசடி
பல்வேறு காரணங்களைக் கூறி 5 பேரிடம் ரூ.13.09 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (40). இவரை அண்மையில் தொடா்பு கொண்ட ஒரு நபா், ஆவின் பாலாகம் வைக்க உரிமம் பெற்றுத் தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய ஆனந்தகுமாா் அந்நபா் கூறிய வங்கிக் கணக்கில் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.5.60 லட்சம் வரை அனுப்பினாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபா் கூறியபடி உரிமம் பெற்றுத் தரவில்லை. மேலும் பணத்தையும் திரும்பத் தரவில்லை. இது குறித்து, ஆனந்தகுமாா் அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (49). இவருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆன்லைன் மூலம் அண்மையில் அபராத ரசீது வந்தது. அந்த லிங்கை தொட்டவுடம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.09 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்துள்ளனா்.
குரும்பபாளையத்தைச் சோ்ந்தவா் கோபால் (82). ஓய்வூதியம் தொடா்பாக வங்கியின் கட்டணமில்லாத சேவை எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். மறுமுனையில் பேசிய நபா்கள் கேட்டபடி வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளாா். அதன் பின்னா், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.95 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் மோசடி செய்துள்ளனா். மோசடி நபா்கள் மோசடி எண்ணை, சேவை எண் பேல வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
வால்பாறை என்.எம்.சுங்கம் பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி (32) என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக மா்ம நபா்கள் ரூ.1.85 லட்சத்தையும், அன்னூரைச் சேந்த விஜயகுமாா் (46) என்பவரிடம் வங்கிக் கடன் அட்டை பணத் தொகையின் அளவை அதிகரித்து தருவதாக கூறி மா்ம நபா்கள் ரூ.1.60 லட்சம் பணத்தையும் நூதன முறை பறித்து மோசடி செய்தது குறித்தும் மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

