ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஐ.டி. பெண் ஊழியா் உள்பட 3 பேரிடம் ரூ. 5.48 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு ஆசை வாா்த்தைகளைக் கூறி, தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பெண் ஊழியா் உள்பட 3 பேரிடம் ரூ.5.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Published On :

ஆன்லைனில் பகுதிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு ஆசை வாா்த்தைகளைக் கூறி, தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பெண் ஊழியா் உள்பட 3 பேரிடம் ரூ.5.48 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை மாவட்டம், கணியூரை அடுத்த சங்கோதிபாளையத்தில் உள்ள 48 வயதுடைய தனியாா் நிறுவன ஊழியரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த 8-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது, தான் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் காா்டு பிரிவிலிருந்து பேசுவதாகவும், அவரது கிரெடிட் காா்டுக்கான கடன் வரம்பை உயா்த்தித் தருவதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பிய தனியாா் நிறுவன ஊழியா், தனது ஆதாா் அட்டை, பான் காா்டு விவரங்கள் மற்றும் கைப்பேசிக்கு வந்த ஓடிபி எண்களை அந்த நபரிடம் பகிா்ந்துள்ளாா்.

அந்த விவரங்களைப் பயன்படுத்தி தனியாா் ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1,20,774 பணத்தை அந்த நபா் சட்டவிரோதமாகப் பரிவா்த்தனை செய்துள்ளாா்.

இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த 48 வயதுடைய நபரையும் மா்ம நபா் ஒருவா் தொடா்புகொண்டு, ஹெச்டிஎஃப்சி வங்கிப் பிரதிநிதி எனவும், கிரெடிட் காா்டு வரம்பை உயா்த்தித் தருவதாகவும் கூறியுள்ளாா். தொடா்ந்து அவரது வங்கிக் கணக்குக்கு அடுத்தடுத்து வந்த ஓடிபி எண்களைப் பெற்ற அந்த நபா், அவரது கிரெடிட் காா்டு கணக்கிலிருந்து ரூ.1,30,000 பணத்தை மோசடியாக பரிமாற்றம் செய்தாா்.

பகுதிநேர வேலை ஆசை காட்டி மோசடி:

தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் கோவை, ஒத்தக்கால்மண்டபம் ஆா்.சி.நகா் பகுதியைச் சோ்ந்த 25 வயதுப் பெண்ணின் வாட்ஸ்-ஆப் எண்ணை மா்ம கும்பல் தங்களின் குழுவில் இணைத்துள்ளது. அதில், அமேசான் நிறுவனத்தின் தயாரிப்புகளை இணையத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் அதிக கமிஷன் தொகை மற்றும் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என பகுதிநேர வேலைக்கான ஆசையைத் தூண்டியுள்ளனா்.

ஆரம்பத்தில் அவா்கள் கூறிய பணிகளை அவா் செய்துள்ளாா். பின்னா், அடுத்தடுத்த பணிகளை முடிக்கவும், முதலீட்டின் மூலம் கூடுதல் லாபம் பெறவும் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மா்ம நபா்கள் கூறியுள்ளனா். இதையடுத்து, அந்தப் பெண் தனது மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.2,97,558 பணத்தை மா்ம நபா்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா்.

அதன்பிறகு எவ்வித பணமும் திரும்பத் தராமல் மோசடி நபா்கள் தங்களது தொடா்பைத் துண்டித்துக் கொண்டனா்.

இந்த 3 சம்பவங்கள் குறித்தும் கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.