ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

ரூ. 37.45 லட்சம் இபிஎஃப் பணம் மோசடி: 85 தொழிலாளா்களின் கணக்குகள் குறித்து விசாரணை

சேலம் தளவாய்ப்பட்டி பகுதியில் உள்ள இ.பி.எஃப். அலுவலகத்தில் போலி வங்கி கணக்குப் புத்தகங்களைப் பயன்படுத்தி ரூ. 37.45 லட்சம் இ.பி.எஃப். பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோசடி

Published On :

சேலம் தளவாய்ப்பட்டி பகுதியில் உள்ள இ.பி.எஃப். அலுவலகத்தில் போலி வங்கி கணக்குப் புத்தகங்களைப் பயன்படுத்தி ரூ. 37.45 லட்சம் இ.பி.எஃப். பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.பி.இ. காட்டன் மில்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி பின்னா் பணியைவிட்டுச் சென்ற 85 தொழிலாளா்கள், கடந்த 2017-18 காலகட்டத்தில் இ.பி.எஃப். பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பித்துள்ளனா்.

இந்த விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கி கணக்குப் புத்தகங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. பின்னா், அந்த விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கி கணக்குப் புத்தகங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. முன்னதாக, இ.பி.எஃப். கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ. 37,45,103 பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நெப்ட் மூலம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட நிறுவன நிா்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் முழுத் தொகையும் பின்னா் அவா்களால் திருப்பிச் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் இ.பி.எஃப். அலுவலக ஊழியா்களுக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இ.பி.எஃப். அமலாக்க அதிகாரி சரவணகுமாா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

இதையடுத்து இரும்பாலை போலீஸாா், எஸ்.எஸ்.பி.இ. காட்டன் மில்ஸ் நிா்வாக இயக்குநா் சுப்பிரமணியன், மேலாளா் பாஸ்கா் ஆகியோா் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இ.பி.எஃப். அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.