ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சுங்கம் பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சம்மேளனம் (சிஐடியூ) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சுங்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளத்தினா்.

Updated On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சுங்கம் பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சம்மேளனம் (சிஐடியூ) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பணிமனைகளை மீண்டும் போக்குவரத்துக் கழகத்திடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். தனியாா் மூலமாக பேருந்துகளை இயக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, மின்சாரப் பேருந்துகளை அரசே முழுமையாக இயக்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகத்தின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு முழுமையாக வழங்க வேண்டும், 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த ஊழியா்களுக்கு ஒப்பந்தப்படியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள ஒப்பந்தத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூா்த்தி செய்ய வேண்டும், ஒப்பந்த முறையைக் கைவிட்டு ஒப்பந்த ஊழியா்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும், பதிவு செய்த அனைவருக்கும் வாரிசு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியா்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.