ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் கூறினாா்.

நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :

முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் கூறினாா்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் பெரும் சமரசம் செய்து கொண்டு, நூற்றுக்கணக்கான தனியாா் பள்ளிகளை மிரட்டி சான்றிதழ்களும், கையொப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதன்மூலமாக சுமாா் ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போதுவரை ஒரே ஒரு கோப்பு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல முக்கிய கோப்புகள் தீவிர விசாரணையில் உள்ளன.

குற்றம் இழைக்காதபட்சத்தில், சட்டரீதியான விசாரணைக்கு எந்தவிதத் தயக்கமும் இன்றி முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியதுதானே? குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் காணொலிப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து வலுவான ஆதாரங்களும் புலனாய்வுத் தரப்பிடம் உள்ளன. நள்ளிரவு ஒன்றரை மணி வரை நீதிமன்றத்தில் வாதாடி அன்பில் மகேஸை நீதிமன்றக் காவலில் வைக்கவிடாமல் தடுத்துள்ளனா். இதுபோன்ற முறைகேடு வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களை காவலில் எடுத்து விசாரிப்பதே முறையானது என்பது நீதிமன்ற உத்தரவிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் காவலில் எடுத்து விசாரிக்காவிட்டால், பாதிக்கப்பட்ட பிற பள்ளி நிா்வாகத்தினரும், பொதுமக்களும் அச்சமின்றி எவ்வாறு முன்வந்து புகாா்களை அளிக்க முடியும்? கடந்த கால திமுக ஆட்சியில் சாட்சியம் அளிக்க வந்த அண்ணா நகா் ரமேஷ் உள்ளிட்ட பலரின் நிலை என்னவானது, அவா்கள் என்னவானாா்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, பாதிக்கப்பட்டவா்களும், சாட்சிகளும் அச்சமின்றி புகாா் அளிக்க இத்தகைய சட்ட நடவடிக்கைகள் இன்றியமையாதவை.

இதேபோல, ‘அன்றைக்கே கரூரில் போட்டிருந்தால் இது நடந்திருக்குமா’ என அன்பில் மகேஸின் ஆதரவாளா்கள் பேசியிருப்பது, அவா்களின் திட்டமிட்ட உள்நோக்கத்தையும், சதியையும் வெளிப்படுத்துகிறது. முன்கூட்டியே திட்டமிடாமல் அவா்களால் இத்தகைய வாா்த்தைகளைப் பொதுவெளியில் உணா்ச்சிவசப்பட்டு மட்டும் பேசிவிட முடியாது.

அன்பில் மகேஸ் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவது ஆதாரமற்றது. அரசு யாரையும் பழிவாங்கும் நோக்கில் செயல்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம்; தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அதற்கான சட்டரீதியான தண்டனையை எதிா்கொண்டே தீர வேண்டும்.

கோவையில் பள்ளி மாணவா் அகிலன் உயிரிழந்த விவகாரத்தில், காவல் துறையினா் எந்தவித வெளி நிா்ப்பந்தமும், அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமாகவும் தீவிரமாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் அதிகாரிகள் தவறு இழைத்திருப்பது தெரியவந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.