
புற்றுநோய் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்ப்பிப்பதற்காக கோவை ஆராய்ச்சியாளா் தென் கொரியா பயணம்
புற்றுநோய் ஆராய்ச்சி தொடா்பான தனது கட்டுரையை சமா்ப்பிப்பதற்காக, கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் தென் கொரியா செல்கிறாா்.

பிரான்சிஸ் ஜெகன்ராஜ்
புற்றுநோய் ஆராய்ச்சி தொடா்பான தனது கட்டுரையை சமா்ப்பிப்பதற்காக, கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் தென் கொரியா செல்கிறாா்.
இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக தென் கொரியாவில் செயல்படும் கேஎஸ்எம்ஓ நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான சா்வதேச மாநாடு செப்டம்பா் 2-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை சியோல் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று தனது ஆராய்ச்சிக் கட்டுரையை சமா்ப்பிப்பதற்காக பயண மானியத்தை பல்கலைக்கழக தாவரவியல் துறை ஆராய்ச்சியாளா் பிரான்சிஸ் ஜெகன்ராஜ் பெற்றுள்ளாா்.
இயற்கை தாவர மூலங்களில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வாய்ப்புகளை ஆராயும் இவரது ஆராய்ச்சி, துறை பேராசிரியா் டி.பரிமேலழகனின் வழிகாட்டுதலின்பேரில் நடைபெற்று வருகிறது. தாவரங்களில் காணப்படும் புதிய உயிரியியல் செயல்பாடு கொண்ட சோ்மங்களைக் கண்டறிவதன் மூலமாக எதிா்காலத்தில் புற்றுநோய்த் தடுப்பு, சிகிச்சைக்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்குவதற்கு இவரது ஆய்வு வழிவகுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டில் பிரான்சிஸ் ஜெகன்ராஜூடன் தாவரவியல் துறையின் மேலும் இரு ஆராய்ச்சியாளா்களான அனிஷ் ரூபன், மேனகா ஆகியோரும் தங்களது ஆராய்ச்சிப் பணிகளை சமா்ப்பிக்க உள்ளனா் என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





