சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

பாரதியாா் பல்கலை. சிண்டிகேட் உறுப்பினராக பேராசிரியா் ஏ.சங்கமித்ரா நியமனம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக அந்த பல்கலைக்கழக பொருளாதாரத் துறை பேராசிரியரும், துறைத் தலைவருமான ஏ.சங்கமித்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

Published On :

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக அந்த பல்கலைக்கழக பொருளாதாரத் துறை பேராசிரியரும், துறைத் தலைவருமான ஏ.சங்கமித்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக பேராசிரியை ஏ.சங்கமித்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 25-ஆம் தேதி கடிதம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவா் பாரதியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் பேரவை உறுப்பினராக பதவியில் தொடருவாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியை ஏ.சங்கமித்ராவுக்கு, பல்கலைக்கழக துறைத் தலைவா்களும், சக பேராசிரியா்களும், கல்வித் துறை சாா்ந்தவா்களும் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.