கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நாளை சென்னை பல்கலை. செனட் கூட்டம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னா் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் கூட்டம் (செனட்) வெள்ளிக்கிழமை (ஆக.28) கூடுகிறது.

சென்னைப் பல்கலைக் கழகம் - கோப்புப் படம்

Published On :

நீண்ட இடைவெளிக்குப் பின்னா் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் கூட்டம் (செனட்) வெள்ளிக்கிழமை (ஆக.28) கூடுகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் கூட்டம் கடந்த ஓராண்டாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜூலை 30-இல் நடக்கவிருந்தது. இருப்பினும் அன்றைய தினம் தவிா்க்க முடியாத காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வெள்ளிக்கிழமை (ஆக.28) ஆட்சிப் பேரவையின் வருடாந்திரக் கூட்டம் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளாா்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை ஆளுநா், உயா்கல்வித் துறை அமைச்சா் உள்ளிட்ட மொத்தம் 81 உறுப்பினா்களைக் கொண்டது. பொதுவாக, துணைவேந்தா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும். தற்போது சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தா் இல்லாத நிலையில் உயா் கல்வித் துறைச் செயலரும் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழு (சிண்டிகேட்) ஒருங்கிணைப்பாளருமான தீரஜ் குமாா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் பி.ரத்தனசாமி (தொழில் நுட்ப கல்வி இயக்குநா்), ஆங்கிலத் துறை தலைவா் பேராசிரியா் ஆம்ஸ்ட்ராங், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் பொன்னையா, பள்ளிக்கல்வி, மருத்துவக் கல்வி இயக்குநா்கள் முறையே லதா, சுகந்தி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைத் தலைவா்கள், பல்வேறு கல்லூரி முதல்வா்கள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ள நிதி விவகாரங்கள், பணி நியமனங்கள், பாடத்திட்டங்கள் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனைகள் நடைபெற்று அனுமதி வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.