தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

நகா்ப்புற ஆதரவற்றோா் விடுதிகளில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நகா்ப்புற வீடற்ற ஆதரவற்றோா் தங்கும் விடுதிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

உக்கடம் கெம்பட்டி காலனி நகா்ப்புற வீடற்ற ஆதரவற்றோா் தங்கும் விடுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா. ~உக்கடம் கெம்பட்டி காலனி நகா்ப்புற வீடற்ற ஆதரவற்றோா் தங்கும் விடுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா்

Published On :

நகா்ப்புற வீடற்ற ஆதரவற்றோா் தங்கும் விடுதிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 80-ஆவது வாா்டுக்குள்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் மாநகராட்சி இடத்தில் நகா்ப்புற வீடற்றோா் காப்பகத்தின் முதல் தளத்தில் 25, இரண்டாம் தளத்தில் 25 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகளில் 49 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அதேபோல, தெற்கு மண்டலம் 89-ஆவது வாா்டுக்குள்பட்ட சுண்டக்காமுத்தூா் என்.டி.பி. வீதியில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய நகா்ப்புற வீடற்றோா் தங்கும் விடுதியில் 36 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இவா்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, விடுதிக்கான சுற்றுச்சுவா் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்கவும், கட்டடப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், சுண்டக்காமுத்தூா் பகுதியில் ரூ.98 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள பாலத்துக்கான இடத்தையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வுகளின்போது, நகா்நல அலுவலா் சுபாஷ் காந்தி, உதவி ஆணையா்கள் கணேசன் (மத்தியம்), மகேஷ்கனகராஜ் (தெற்கு), செயற்பொறியாளா் ஜெகன், உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா் (பொறுப்பு), மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், உதவிப் பொறியாளா்கள் நவநீதகிருஷ்ணன், அனிதா உள்பட பலா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.