நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

காவல் அருங்காட்சியகத்தைப் பாா்வையிட பொதுமக்களுக்கு 6-ஆம் தேதி இலவச அனுமதி

காவலா் தினத்தையொட்டி, கோவை மாநகரில் அமைந்துள்ள காவல் அருங்காட்சியகத்தை வரும் 6-ஆம் தேதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இலவசமாகப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை காவல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ராணுவத்தினா் மற்றும் கடற்படையினா் பயன்படுத்திய ராணுவ உபகரணங்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 2:11 am IST

காவலா் தினத்தையொட்டி, கோவை மாநகரில் அமைந்துள்ள காவல் அருங்காட்சியகத்தை வரும் 6-ஆம் தேதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இலவசமாகப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவல் துறையின் வரலாறு, சாதனைகள், பணிகள், உள்கட்டமைப்பு மற்றும் புலனாய்வு முறைகள் போன்ற பல்வேறு அம்சங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கோவை ரயில் நிலையம் எதிரே காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காவல் துறையினா் பயன்படுத்திய சேவை ஆயுதங்கள், சீருடைகள், தர அடையாளங்கள், பதக்கங்கள், சின்னங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், முன்னாள் முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரனால் வழங்கப்பட்ட வாள், நினைவு அஞ்சல் தலைகள், வீரப்பன் மற்றும் மலையூா் மம்பட்டியான் உள்ளிட்ட குற்றக் குழுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், ராணுவம் மற்றும் கடற்படையில் பயன்படுத்தப்பட்ட டி-55 டேங்க், ரிகாமிலெஸ் துப்பாக்கி, டாா்பிடோ மற்றும் நன்ழ்ச்ஹஸ்ரீங் ற்ா் அண்ழ் ஙண்ள்ள்ண்ப்ங் (நஅங) உள்ளிட்ட ராணுவ உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.