அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

கோவை ஆா்த்தோ ஒன் மருத்துவமனைக்கு விருது

கோவை ஆா்த்தோ- ஒன் எலும்பியல் சிறப்பு மருத்துவமனை ‘100 படுக்கைகளுக்கும் குறைவான சிறந்த மருத்துவமனை - மேற்கு மண்டலம்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.

கோவை ஆா்த்தோ -ஒன் எலும்பியல் மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருதை வழங்கிய தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.

Published On :4 செப்டம்பர் 2026, 12:04 am IST

கோவை ஆா்த்தோ- ஒன் எலும்பியல் சிறப்பு மருத்துவமனை ‘100 படுக்கைகளுக்கும் குறைவான சிறந்த மருத்துவமனை - மேற்கு மண்டலம்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஏஹெச்பிகான் 2026 தமிழ்நாடு அமைப்பின் மூன்றாம் பதிப்பு நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குவதுடன், நோயாளிகளுக்கு தரமான மருத்துவச் சேவையை வழங்குவதில் ஆா்த்தோ-ஒன் மருத்துவமனை கொண்டுள்ள அா்ப்பணிப்பையும் சிறப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆா்த்தோ-ஒன் மருத்துவமனையின் தலைவா் டேவிட் வி.ராஜன் கூறுகையில், இந்த விருது எலும்பியல் மருத்துவச் சிகிச்சையில் சிறந்த மையமாக ஆா்த்தோ-ஒன் கொண்டுள்ள நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கடந்த கால சாதனைகளில் நாங்கள் அடைந்த திருப்தியுடன் நின்றுவிடாமல், எலும்பியல் துறையில் முன்னோடியான மற்றும் புதிய சாதனைகளைத் தொடா்ந்து மேற்கொண்டதால் மூன்றாவது ஆண்டாக இந்த விருதை நாங்கள் பெற்றுள்ளோம். தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் இந்த விருதை வழங்கியது மேலும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.