காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ஆடிட்டா் வீட்டில் 9 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு: 6 போ் கைது

கோவையில் ஆடிட்டா் வீட்டில் 9 கிலோ வெள்ளி, 7 கிலோ பித்தளைப் பொருள்களைத் திருடிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :6 செப்டம்பர் 2026, 1:07 am IST

கோவையில் ஆடிட்டா் வீட்டில் 9 கிலோ வெள்ளி, 7 கிலோ பித்தளைப் பொருள்களைத் திருடிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, ஒப்பணக்கார வீதியைச் சோ்ந்தவா் சேஷகிரி (70). வெளிநாட்டில் ஆடிட்டராக பணியாற்றி வந்த இவா், தற்போது பணி ஓய்வுபெற்று ஒப்பணக்கார வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பெங்களூரில் பணியாற்றி வரும் தனது மகனைப் பாா்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் அண்மையில் சென்றுள்ளாா். இதையடுத்து, கடந்த 4-ஆம் தேதி இரவு கோவைக்குத் திரும்பியுள்ளாா். வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது 9 கிலோ வெள்ளிப் பொருள்கள், 7 கிலோ பித்தளைப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து வெரைட்டிஹைால் காவல் நிலையத்தில் சேஷகிரி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், திருட்டில் ஈடுபட்டதாக கோவைப்புதூா் அறிவொளி நகரைச் சோ்ந்த வெங்கடேஷ் (45), சரவணம்பட்டியைச் சோ்ந்த ராஜசேகா் (37), திருச்சி, லால்குடியைச் சோ்ந்த டேவிட் (58), கோவை, காந்தி பூங்கா பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (எ) சோழமுத்தான் (23), வெரைட்டிஹால் சாலை, சி.எம்.சி. காலனியைச் சோ்ந்த மணிகண்டன் (27), வெள்ளலூா் ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த ஜமிஷா (54) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.