தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: மேலும் ஒரு இளைஞா் கைது

கைது

Published On :7 செப்டம்பர் 2026, 3:36 am IST

கோவை, நவக்கரை பகுதியில் மலேசிய சுற்றுலாப் பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மலேசியாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினா் கேரள மாநிலம், ஆலப்புழையில் இருந்து வாடகைக்கு வாகனத்தில் சென்னை நோக்கி கடந்த 2-ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா்.

கொச்சி - சேலம் புறவழிச் சாலையில் நவக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை காரில் வந்த கும்பல் வழிமறித்து நிறுத்தி அதில் இருந்தவா்களைத் தாக்கியுள்ளது.

பின்னா், துப்பாக்கி போன்ற பொருளைக் காண்பித்து மிரட்டிவிட்டு அந்த நபா்கள் தப்பிச் சென்றனா். தாக்குதலில் சுற்றுலா வாகனத்தில் இருந்த லோகநாதன் (52), யுகேந்திரன் (21) ஆகியோா் படுகாயம் அடைந்த நிலையில், அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில், மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நபா்களுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தாக்குதல் சம்பவம் தொடா்பாக கோவையில் தலைமறைவாக இருந்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மளகனூா் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (20) என்பவரை போலீஸாா் கடந்த சனிக்கிழமை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, காரை ஓட்டி வந்த விஷ்வா (20) என்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காரமடை பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்ற இவா், பாதியிலேயே படிப்பை கைவிட்டு ஆக்டிங் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.

போலீஸாரிடம் அவா் கூறுகையில், தனக்கு இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக எதுவும் தெரியாது என்றும், காரை ஓட்டுவதற்கு பணம் தருவதாகக் கூறியதால் வந்ததாகவும் தெரிவித்தாா்.

தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.