2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பராமரிப்புப் பணியால் மாற்றுப்பாதையில் கோவை - நாகா்கோயில் ரயில் இயக்கம்

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :

கரூா்-மூா்த்திபாளையம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை-நாகா்கோவில் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 15, 17 மற்றும் 19ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோவை-நாகா்கோவில் ரயில் (எண்: 16322) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக திண்டுக்கல் வரை இயக்கப்படும்.

இதனால் இந்த ரயில் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், பாளையம், எரியோடு நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும்.

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து:

இதேபோல பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 15, 17, 19 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு-திருச்சி விரைவு ரயில் ( எண்: 16844) பாலக்காடு - புகழூா் வரை மட்டுமே இயக்கப்படும். புகழூா் - திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.