
மாநகராட்சிப் பகுதியில் ஒரே நாளில் 800 நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி

கிழக்கு மண்டலத்தில் தெரு நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்ட மாநகர சுகாதாரக் குழுவினா்.
மாநகராட்சிப் பகுதியில் ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாய்க்கடியைத் தடுக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநகராட்சியில் 5, 53, 87 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளான பீளமேடு, காளப்பட்டி, குனியமுத்தூரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தெருநாய்களுக்கான வெறிநோய்க்கடி தடுப்பூசி (அதய) செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பணியை கால்நடை மருத்துவ அலுவலா்கள், கால்நடை மருத்துவப் பயிற்சி மாணவா்கள், களப் பணியாளா்கள், விலங்குகள் நலன் சாா்ந்த தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் தன்னாா்வலா்கள், நாய்களைப் பிடிக்கும் குழுக்கள் மற்றும் பிற உதவிப் பணியாளா்கள் ஆகியோா் ஒருங்கிணைந்து மேற்கொண்டனா். சனிக்கிழமை ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கைக்கு முழுமையான தடுப்பூசி பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்கில், அனைத்து மண்டலங்களிலும் வெறிநோய்த் தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி குழுக்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






