கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

செட்டிபாளையம், கோவில்பாளையம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க வேண்டும்! - கே.ஈஸ்வரசாமி எம்.பி. வலியுறுத்தல்

பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி.

Published On :

கோவை, பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் செட்டிபாளையம் மற்றும் கோவில்பாளையம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவை - –பொள்ளாச்சி இடையிலான முக்கிய ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம் மற்றும் கோவில்பாளையம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பது தொடா்பான நீண்ட காலக் கோரிக்கையை மீண்டும் நினைவூட்டுகிறேன். மதுரை–- செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள கரிவலம்வந்தநல்லூா் மற்றும் சோழபுரம் ஆகிய இடங்களில் புதிய ரயில் நிலையங்களை அமைக்க ரயில்வே அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு சேவையை வழங்கி வந்த செட்டிபாளையம் மற்றும் கோவில்பாளையம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க வேண்டும்.

செட்டிபாளையம் ரயில் நிலையம் சேலம் கோட்ட நிா்வாகத்தின் கீழும், கோவில்பாளையம் ரயில் நிலையம் பாலக்காடு கோட்ட நிா்வாகத்தின் கீழும் நிா்வகிக்கப்பட்டு வந்தன. கோவை - பொள்ளாச்சி ரயில் பாதையில் அகலப் பாதை மாற்றுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்த இரண்டு நிலையங்களும் இடித்து அகற்றப்பட்டன.

அந்த சமயத்தில் அகலப் பாதை பணிகள் நிறைவடைந்த பின் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் உறுதி அளித்தது. ஆனால், அகலப் பாதை மாற்றுப் பணிகள் நிறைவடைந்து பல ஆண்டுகளைக் கடந்த பின்னரும், இந்த இரண்டு ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டால் செட்டிபாளையம், கோவில்பாளையம் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள், வணிகா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் ரயில் போக்குவரத்தை எளிதாக அணுக முடியும்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த விவகாரத்தை ரயில்வே அமைச்சகம் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்குமாறு வலியுறுத்துகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.