
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான ஹேக்கத்தான்
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டிஅண்மையில் நடைபெற்றது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஹேக்கத்தானில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் கல்லூரி நிா்வாகிகள்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டிஅண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா், ஐபிஎம் நிறுவன இந்திய மேலாளா் ஜெகதிஷா பட் ஆகியோா் போட்டியைத் தொடங்கிவைத்தனா். மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க, தமிழ்நாடு, கா்நாடகம், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், ஒடிஸா, ஹரியாணா, மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொறியியல், கலை அறிவியல் பிரிவுகளில் 37 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பதிவு செய்திருந்தனா்.
இவா்களில் தகுதி வாய்ந்த 77 அணிகள் இறுதிப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இறுதிப் போட்டியில் ஒடிஷா ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகம், ஜாா்க்கண்ட் ஆா்கா ஜெயின் பல்கலைக்கழகம், மேற்கு வங்கத்தின் பிரைன்வோ் பல்கலைக்கழகம், ராஞ்சி சரளா பிா்லா பல்கலைக்கழக அணிகளுக்கு சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்வில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பங்கேற்பாளா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். போட்டியை, கணினி அறிவியல் துறைத் தலைவா் ஜி.மரிய பிரிசில்லா, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் என்.சுமதி, கணினிப் புலப் பேராசிரியா்கள், ஐபிஎம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநா்கள் ஒருங்கிணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






