
காலை உணவுத் திட்டம்: நகராட்சி மண்டல இயக்குநா் ஆய்வு
வால்பாறையில் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவது குறித்து நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி சமையல் கூடத்தில் ஆய்வு செய்த நகராட்சி மண்டல இயக்குநா் மூா்த்தி.
வால்பாறையில் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவது குறித்து நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வால்பாறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 91 பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் அமைக்கப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் உணவு அனுப்பிவைக்கப்படுகிறது.
இந்நிலையில், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் மூா்த்தி, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி சமையல் கூடத்தில் உணவு தயாா் செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்தாா். மேலும், சில பள்ளிகளுக்குச் சென்று உணவின் தரம், சுவை குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.
நகராட்சி பொறியாளா் ஆறுமுகம், துப்பரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் சுரேந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






