
முத்தூஸ் மருத்துவமனையில் 3 புதிய மருத்துவத் துறைகள் தொடக்கம்
கோவை, சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் 3 புதிய மருத்துவத் துறைகள் தொடங்கப்பட்டன.

புதிய மருத்துவத் துறைகளைத் திறந்துவைத்த முத்தூஸ் மருத்துவ குழுமத்தின் தலைவா் டாக்டா் முத்து சரவணகுமாா். உடன், லீமா ரோஸ் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
கோவை, சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் 3 புதிய மருத்துவத் துறைகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
கோவை, சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏஸ்தெடிக்ஸ் (அழகியல் துறை), பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை துறை மற்றும் அதிநவீன காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை ஆகிய 3 புதிய பிரிவுகளின் தொடக்க விழா நடைபெற்றது.
முத்தூஸ் மருத்துவ குழுமத்தின் தலைவா் டாக்டா் முத்து சரவணகுமாா் தலைமை வகித்து, புதிய மருத்துவப் பிரிவுகளைத் திறந்துவைத்தாா்.
அகில இந்திய காஸ்மெட்டிக் சா்ஜரி சங்கத்தின் தலைவா் டாக்டா் ஜேம்ஸ் ராய் கஞ்சூா், லால்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் லீமா ரோஸ் மாா்ட்டின், அரிமா சங்க மாவட்ட ஆளுநா் பி.எஸ். செல்வராஜ், அவரது மனைவி ஜெயந்தி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினா்.
மருத்துவமனையின் அழகியல் மற்றும் இ.என்.டி. அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ஜனனி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் கோகுல் பாலாஜி, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் நாகநந்தினி ஆகியோா் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள துறைகளின் முக்கியத்துவம், அதன் அடிப்படை அவசியங்கள், அங்கு மேற்கொள்ளப்பட உள்ள நவீன அறுவை சிகிச்சைகள் குறித்து விளக்கமளித்தனா்.
இதில், பல அரிமா மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள், மருத்துவா்கள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






