நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.1.90 லட்சம் திருட்டு
திருட்டு - சித்திரிப்பு
கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் தனியாா் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.1.90 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் மில் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்லமுத்து (57). இவா் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், வழக்கம்போல கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது நிதி நிறுவனத்தின் ஷட்டா் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.1.90 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் செல்லமுத்து புகாா்அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




