விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கோயிலின் பூட்டை உடைத்து அம்மனின் தங்கத் தாலி திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Published On :8 செப்டம்பர் 2026, 2:05 am IST

அவிநாசி அருகே தெக்கலூா் திம்மனையாம்பாளையம் மாகாளியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து அம்மனின் தங்கத் தாலி, வெள்ளிப் பொருள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தெக்கலூா் திம்மனையாம்பாளையத்தில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்து பூட்டப்பட்டது.

திங்கள்கிழமை காலை பொதுமக்கள் வந்து பாா்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்கத் தாலி, வெள்ளிச் சங்கிலி உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.