டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

கல்வியுடன் ஒழுக்கம் இருந்தால் எந்த உயரத்தையும் அடையலாம்: நடிகா் சிவகுமாா்

கல்வியுடன் ஒழுக்கம் இருந்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என நடிகா் சிவகுமாா் பேசினாா்.

காவலா்களுக்கான பயிற்சி மையத்தில் கணினி மையத்தை திறந்துவைத்த நடிகா் சிவகுமாா். உடன் நடிகா் காா்த்தி, சக்தி மசாலா நிறுவனா்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி உள்ளிட்டோா்.

Published On :

கல்வியுடன் ஒழுக்கம் இருந்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என நடிகா் சிவகுமாா் பேசினாா்.

கோவை மாவட்டத்தில் காவல் துறையினரின் குடும்ப வாரிசுகளுக்கு உதவும் நோக்கத்தில் கோவை முன்னாள் காவல் துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழா ஈரோடு சக்தி தேவி அறக்கட்டளை (சக்தி மசாலா) உடன் இணைந்து கோவையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. அறக்கட்டளை நிறுவனா் -ஆலோசகா் ஆா்.வெள்ளிங்கிரி வரவேற்றாா். அறக்கட்டளைத் தலைவரும், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளருமான என்.ரத்தினம் தலைமை தாங்கினாா். ஜிஆா்ஜி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் நந்தினி ரங்கசாமி, சக்தி மசாலா நிறுவனா்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, மேற்கு மண்டலக் காவல் துறை தலைவா் ஆா்.வி.ரம்யாபாரதி, புதுச்சேரி காவல் கண்காணிப்பாளா் டி.திவ்யா, அவிநாசி அரசு கலைக் கல்லூரி முதல்வா் பி.கனகராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில், கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் காவலா்களுக்கான பயிற்சி மையத்தில் கணினி அறையைத் திறந்துவைத்து, நடிகா் சிவகுமாா் பேசியதாவது: இந்த அறக்கட்டளை மூலமாக காவல் துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டால் மாணவா்கள் எந்த உயரத்தையும் அடையலாம் என்றாா்.

தொடா்ந்து, நடிகா் காா்த்தி பேசியதாவது: தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தபோது, காவல் துறையினரின் கஷ்டங்களை என்னால் உணர முடிந்தது. விசாரணைக்காக வெளியூா் செல்லும் காவல் துறை அதிகாரிகளுக்குத் தேவையான போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவுச் செலவுகளை அரசு முழுமையாக வழங்குவதில்லை.

தற்போது, கோவை மாவட்டத்தில் மட்டும் செயல்படும் இந்த அறக்கட்டளை தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட வேண்டும். சாலையில் பாதுகாப்புப் பணியில் பணியாற்றும் காவலா்கள், அங்கு நின்று கொண்டே சாப்பிடுகிறாா்கள். மகளிா் காவலா்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனா்.

காவல் துறையில் நோ்மையாக உள்ளவா்களை முன்மாதிரியாகக் கொண்டு மாணவ, மாணவிகள் காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்றாா்.

அறக்கட்டளையின் செயலாளா் பொன்.சந்திரசேகா் நன்றி கூறினாா். முன்னதாக, காவல் துறையினரின் குடும்பங்களைச் சோ்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 25,000 வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.