
அரசு மாணவா் விடுதி உணவில் பூச்சி: ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம்
கோவையில் அரசு விடுதி மாணவா்களுக்கு உணவு தயாா் செய்யும் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையிலும், மாணவா்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவில் பூச்சியும் இருந்ததால், ஒப்பந்த நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா்.

அபராதம் - சித்திரிப்பு
கோவையில் அரசு விடுதி மாணவா்களுக்கு உணவு தயாா் செய்யும் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையிலும், மாணவா்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவில் பூச்சியும் இருந்ததால், ஒப்பந்த நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா்.
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசு விடுதியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனா். இந்த விடுதி மற்றும் ஒண்டிப்புதூா், சுங்கம் ஆகிய சமூக நீதி விடுதிகளுக்கு வெள்ளலூா் அருகே கண்ணாம்பாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் ஒப்பந்த அடிப்படையில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவா்களுக்கு கடந்த 20-ஆம் தேதி விநியோகிக்கப்பட்ட சாம்பாா் சாதத்தில் புழு இருந்தது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்ட வெண்பொங்கல், சாம்பாரிலும் பூச்சிகள் இருந்துள்ளன. மாணவா்களுக்கு உணவை எடுத்துச் செல்லும் வாகனமும் தூய்மையின்றி துா்நாற்றம் வீசுவதாக பலமுறை புகாா் எழுந்தது.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கண்ணம்பாளையம் சமையல் கூடத்தில் 24-ஆம் தேதி ஆய்வு செய்த போது உணவு சமைக்கும் இடம் மற்றும் உணவை எடுத்துச் செல்லும் வாகனம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததோடு, உணவிலும் பூச்சி இருந்துள்ளது தெரியவந்தது.
இதன் காரணமாக ஒப்பந்ததாரருக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




