வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

தீபாவளி: போத்தனூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Published On :

தீபாவளிப் பண்டிகைக்கு கோவை, போத்தனூரில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போத்தனூா் ரயில் பயனாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் ச.சுப்பிரமணியன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் வணிக நோக்கங்களுக்காக கோவையில் வசித்து வருகின்றனா். எனவே, தீபாவளி காலத்தில் ரயில் பயணத்துக்கான தேவை அதிகமாக இருக்கும்.

எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போத்தனூா், பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி வழியாக கோவை - ராமேசுவரம் சிறப்பு ரயில், கோவை - போடிநாயக்கனூா் சிறப்பு ரயில், கோவை - தூத்துக்குடி சிறப்பு ரயில், போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி திண்டுக்கல் வழியாக போத்தனூா் - கொல்லம் சிறப்பு ரயில், பழனி, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி வழியாக போத்தனூா் - தாம்பரம் சிறப்பு ரயில், பழனி, திண்டுக்கல், திருச்சி, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக போத்தனூா் - காரைக்கால் சிறப்பு ரயில், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் வழியாக கோவை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில், கோவை, சேலம், ஆத்தூா், சின்ன சேலம், விருத்தாச்சலம் நெய்வேலி, கடலூா், பண்ருட்டி வழியாக போத்தனூா் - புதுச்சேரி சிறப்பு ரயில் ஆகியவற்றை இயக்க வேண்டும்.

இந்த சிறப்பு ரயில்கள் தீபாவளி காலத்தில் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.