மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க 20 நடமாடும் குழுக்கள் அமைப்பு

ஈரோடு மாவட்டத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக 20 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On :

ஈரோடு மாவட்டத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக 20 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் சனிக்கிழமை விடுத்த செய்தி:

 ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான அங்க அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 50 குழுக்கள் அமைத்து பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தபட்டு வருகின்றன.

வெள்ளிக்கிழமை முதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக பதிவு செய்யும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 இதுவரை ஆதார் அடையாள அட்டைக்கு அங்க அடையாளங்கள் பதிவுகளை மேற்கொள்ளாத மாணவ, மாணவிகளுக்கு மட்டும் இந்த முகாம்களில் அங்க அடையாளங்கள் பதிவு செய்யப்படும்.

 முகாம்களில் கைவிரல்களின் ரேகைள், கண்ணின் கருவிழிகள் பதிவு செய்யப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் 1,716 பள்ளிகளில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 11 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் இதுவரை ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் மட்டும் இந்த முகாமில் அங்க அடையாளங்கள் பதிவு செய்து கொள்ளலாம். 

 ஆதார் அடையாள அட்டைக்கு 20 இயந்திரங்கள் கொண்ட குழுக்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று அங்க அடையாளங்களைப் பதிவு செய்து வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.