சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

மின்மாற்றி வெடித்து காயமான இளைஞருக்கு நிதியுதவி

ஈரோட்டில் மின்மாற்றி வெடித்து காயமான இளைஞருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்பக் கொடை நிதியில் இருந்து ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Updated On :

ஈரோட்டில் மின்மாற்றி வெடித்து காயமான இளைஞருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்பக் கொடை நிதியில் இருந்து ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

 ஈரோடு முனிசிபல் காலனி, விநாயகர் கோயில் அருகே உள்ள மின்மாற்றி சில தினங்களுக்கு முன் திடீரென வெடித்தது. இதிலிருந்து தீப்பொறிகள், சூடான எண்ணெய் கீழே கொட்டியது.

 அப்போது, அவ்வழியாக ஈரோடு அருகே உள்ள நசியனூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது எண்ணெய் விழுந்தது. இதில், அவரது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

 இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் சுப்பிரமணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து ரூ. 10 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

 இதை சுப்பிரமணியத்தின் மனைவி ஹேமலதாவிடம் ஈரோடு வட்டாட்சியர் மோகனா வெள்ளிக்கிழமை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.