கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

சுற்றுச்சூழல் மாசு: இணையதளம் மூலம் புகார் செய்ய புதிய வசதி அறிமுகம்

தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தால் பொதுமக்கள் இணையதளம் மூலமாக புகார் செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தால் பொதுமக்கள் இணையதளம் மூலமாக புகார் செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்த புகார்களை பொதுமக்கள் தற்பொழுது எழுத்துப் பூர்வமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு பெறப்படும் புகாரானது அஞ்சல் மூலம் உரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு அதன் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் 2015-16-இல் நடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் இணையதளம் மூலம் புகார் செய்வதற்கான அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்குத் தேவையான மென்பொருளை ரூ. 10 லட்சம் செலவில் உருவாக்கி உள்ளது.

 பொதுமக்கள் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாரினை எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளம் மூலம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யலாம். மனுதாரர், புகார் குறித்த புகைப்படத்தை அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட புகார் மனுவின் நகலை இணையதளத்தில் இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 மனுதாரர், தனது செல்லிடப்பேசி எண்ணைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இதனால் பதியப்பட்ட புகார் எண், புகார் குறித்த நிலை, புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறுஞ்செய்தியாக மனுதாரரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும்.

 பதியப்பட்ட புகாரானது சம்பந்தப்பட்ட மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளருக்கு நேரடியாகச் சென்றடையும். பெறப்படும் புகாரானது இணைய வழி மூலமாக பரிசீலிக்கப்பட்டு, ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்க இயலும்.

 இம்மென்பொருளில் புகாரை ஆய்வு செய்வதற்கான காலக் கெடுவினை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் நிர்ணயிக்க இயலும்.  எழுத்துப்பூர்வமாக பெறப்படும் அனைத்து புகாரும் வாரியத்தால் ஸ்கேன் செய்யப்பட்டு இம்மென்பொருளில் சேர்க்கப்பட்டு இவ்வகை புகார்களும் இணைய வழி மூலம் பரிசீலிக்கப்படும். மாவட்ட, மண்டல மற்றும் வாரிய தலைமை அலுவலகங்கள் அளவில் பெறப்பட்ட புகார் குறித்து கண்காணிக்க வசதி  செய்யப்பட்டுள்ளது.  

இணையதளம் மூலம் புகார் செய்ய விரும்புவோர் h‌t‌t‌p:​‌w‌w‌w.‌pc​b‌o‌l‌g‌p‌r‌s.‌i‌n​ என்ற இணையதளத்துக்குச் செல்லலாம்.

நாட்டிலேயே முதல்முறை:அமைச்சர்

 "நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் இப்புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து வரும் புகார்களை சென்னையில் இருந்தபடியே உயர் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்தி மாசு இல்லாத தமிழகம் உருவாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.