எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுகாதாரத்தை மீறுபவர்களுக்கு அபராதம்: வரி செலுத்துவோர் சங்கம் கோரிக்கை

சுகாதாரத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:25 am

DIN

சுகாதாரத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்  ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.  சங்கத்தின் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சென்னியப்பன்,   முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ராதாமணி பாரதி,  குட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாரதி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க செயலர் பாரதி  கூறியதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரிக்க வரி வசூலித்து வருகிறது.
ஆனால் மாநகராட்சியில் வாரத்துக்கு ஒருமுறை கூட சாக்கடை தூர்வாரவில்லை. போதிய துப்புரவுப் பணியாளர்களையும் நியமிக்காமல் குப்பைக்கு என வீட்டு உரிமையாளரிடம் தனியே வரி வசூல் செய்கின்றனர்.
ஏற்கெனவே குடியிருக்கும் வீட்டின் பரப்பை பொருத்தும், வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கும் தனித்தனியே வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாக்கடைகளை தூய்மையாக வைப்பது போன்ற எந்தப் பணியையும் மாநகராட்சி நிர்வாகம் செய்வதில்லை.
 அதேநேரத்தில் குப்பைகளை வீதியில் கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் எந்த அபராதமும் விதிப்பதில்லை.  எனவே, சுகாதாரத்தை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரிடம் குப்பைக்காக வரி வசூலிப்பதை கைவிட வேண்டும். டெங்கு கொசு ஒழிப்புக்காக அதிகாரிகள் அபராதம் விதிப்பு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதை தவிர்க்க வேண்டும்.  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் போதிய நிதியை மத்திய அரசு மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.