மாவட்ட அறிவியல் கண்காட்சி: சாகர் பள்ளி சிறப்பிடம்

மாவட்ட அறிவியல் கண்காட்சியில், பெருந்துறை சாகர் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
Updated on
1 min read

மாவட்ட அறிவியல் கண்காட்சியில், பெருந்துறை சாகர் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
ஈரோடு மாவட்ட அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி ஈரோடு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இக்கண்காட்சியில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கலந்துகொண்டன. மாணவ, மாணவிகளின் படைப்புகள் மூன்று பிரிவிகளாக இடம்பெற்றன.
இதில், பெருந்துறை சாகர் பள்ளி மாணவர்கள் அகில்ராஜா இரண்டாம் பிரிவில் முதல் இடத்தையும், மாணவர்கள் நிதிஷ், சுபாஷ் ஆகியோர் மூன்றாம் பிரிவில் 2-ஆவது இடத்தையும் பிடித்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளித் தாளாளர் சி.சௌந்திரராசன், துணை முதல்வர் ராதா மனோகரன்,  ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com