மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ( சிஐடியூ) சிறப்பு பேரவைக் கூட்டம் மாவட்ட நிர்வாகி பெரியசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மின்வாரியத்துக்கு ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ள நிலையில், காலியாக உள்ள 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் பணி ஓய்வு பெறுவோருக்கு ஏற்ப புதிய பணி இடத்தை உருவாக்கி பணி நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.250 ஊதியம் வழங்கி வந்த நிலையில், ரூ. 380 ஊதிய உயர்வு அளிக்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். மேலும், எந்தெந்த தொழிலாளர்களுக்கு என்பதையும் அறிவிக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய பிரிவுகளில் பணியாற்றி வரும் 3 ஆயிரம் பேரையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்ய வேண்டும்.
கடந்த 2015 டிசம்பர் முதல் 2017 அக்டோபர் வரையிலான காலத்தில் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும். காலவரையுடன் கூடிய பணி நியமனம் என்ற முறையை பணி நியமனத்தில் அமல்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கி கோட்டச் செயலர் ஜோதிமணி பேசினார். பொருளாளர் விஸ்வநாதன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் லோகசாமி, பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம்: ஒப்பந்தப் பணியாளர் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என எலக்ட்ரிசிட்டி பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் தமிழ்நாடு நேஷனல் எலக்டரிசிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேஷன் ஆலோசனைக் கூட்டம் மண்டலச்செயலர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
களப் பணியில் காலியாக உள்ள பணிகளை, தற்போது ஒப்பந்தப் பணியில் வேலை செய்து கொண்டிருப்பவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். இரண்டாயிரம் மின் பாதை ஆய்வாளர் பதவிக்கு புதிய பணியிடம் உருவாக்கி உள்ளனர். இப் பணியை நேரடி நியமனம் மூலம் நிரப்பாமல், தற்போது களப் பணியில் உள்ளவர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து நிரப்ப வேண்டும். ஈரோடு மின் பகிர்மான வட்டப் பிரிவு அலுவலகங்களில் கழிவறை துப்புரவு செய்வோராக பணி செய்வோரை நிரந்தரப் பணியாளர்களாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கோட்டத் தலைவர் வி.கல்யாணசுந்தரம், கண்ணுசாமி, முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

