மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்கள்  விருது பெற விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் தெரிவித்துள்ளார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:05 am

விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் சாதனை புரிந்த மற்றும் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி மத்திய அரசு சார்பில் 2018-ஆம் ஆண்டுக்கான துரோணாச்சாரியார் விருது,  ராஷ்டிரிய கேல் புரட்சகான் புரஸ்கார் விருது,  அர்ஜூனா விருது,  தயான்சந்த் விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. 
 இவ்விருதை பெற தகுதியுடையவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.