மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை நால்ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவல்பூந்துறை நால்ரோட்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இருந்த பயணிகள் நிழற்குடை பழுதாகி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மொடக்குறிச்சி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்காக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பூமி பூஜை போடப்பட்டது.
இந்த நிழற்குடை அமைப்பதை எதிர்த்து சிலர் ஈரோடு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், நிழற்குடை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவல்பூந்துறை நால்ரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மொடக்குறிச்சி தாலூகா நில அளவையர் (சர்வேயர்) ஆகியோர் அளவீடு செய்யும் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி, அதன் பின்புறம் உள்ள கடைகள் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்யப்பட்டு குறியீடு செய்யப்பட்டது.
இதுகுறித்து, அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் கே.சி.ராஜேந்திரன், மொடக்குறிச்சி வட்டாட்சியர் ஜெயகுமார் ஆகியோர் கூறியதாவது
அவல்பூந்துறை நால்ரோட்டில் பெரும்பாலன சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனைக் கணக்கிட திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன் (மே 17 2026) 12 ராசிகளுக்கும்! தடை நீங்கும் இந்த ராசிக்கு!

தண்டனையைவிட சீா்திருத்தமே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
