சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு கொங்கு கலையரங்க வளாகத்தில், கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு, சங்கத் தலைவர் சி.முத்துசாமி தலைமை வகித்து தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து, செயலாளர் ஆர்.சின்னசாமி, பொருளாளர் பி.திருமலை உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். தீரன் சின்னமலையின் சுதந்திரப் போராட்ட தியாகங்கள் குறித்து நிர்வாகிகள் நினைவுகூர்ந்து பேசினர். இதில், திரளான நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

ஓடிடியில் கருப்பு எப்போது?
குதிரை பேரம் நடத்தியது யார் என்று நாடறியும்! தவெக அதைச் செய்யவில்லை! செங்கோட்டையன்

ஐபோன் 18 ப்ரோ சிறப்புகள் என்னென்ன? எத்தனை நிறங்களில் கிடைக்கும்?
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


