கோபி குப்பைக் கிடங்கில் தீ
கோபி அருகே நாயக்கன்காடு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென ஞாயிற்றுக்ழமை தீப்பிடித்தது.


கோபி அருகே நாயக்கன்காடு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென ஞாயிற்றுக்ழமை தீப்பிடித்தது.
கோபி - ஈரோடு சாலையில் கோபி நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. சம்பவ இடத்துக்கு கோபி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடிய பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் கோபி - பாரியூர் சாலை, ஈரோடு சாலை புகை மண்டலமாகக் காணப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொளுத்தும் வெயிலுக்கு குப்பையில் இருந்து மீத்தேன் வாயு உருவாகி அதன் மூலம் தீப்பற்றி இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...