9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

திமுக சார்பில்  பாடல் ஒப்பித்தல் போட்டி

ஈரோட்டில் திமுக சார்பில் மாவட்ட அளவிலான பாடல் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:53 am IST

ஈரோட்டில் திமுக சார்பில் மாவட்ட அளவிலான பாடல் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அண்ணா பிறந்த நாளையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக, மாநகர இலக்கிய அணி சார்பில், மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியை, தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தொடக்கிவைத்தார். 
 இதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாடல்களை ஒப்பித்தனர். அதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 2 ஆவது பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3 ஆவது பரிசாக ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும், முதலிடம் பிடித்தவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.
 இதில், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, துணைச் செயலாளர் சின்னையன், இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.