
ஈரோட்டில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு முகாம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான வேளாண் குறைகேட்பு முகாம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 11 முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11.30 முதல் 12.30 மணி வரை விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்னைகள் குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர். எனவே, விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





