திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

மின் கம்பி மீது வைக்கோல் பாரம் உரசி தீ விபத்து

அந்தியூர் அருகே அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி மீது உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

அந்தியூர் அருகே அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி மீது உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. 
கோபி பகுதியிலிருந்து கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோலை ஏற்றிக் கொண்டு  டிராக்டர் அந்தியூர் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்தியூர் - பர்கூர் சாலையில் மூலக்கடையை அடுத்த பனங்கொறை அருகே சென்றபோது, வைக்கோலில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, ஓட்டுநர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார்.  
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூர் தீயணைப்புப் படையினர் வைக்கோலில் பிடித்த தீயை அணைத்தனர். இதில், வைக்கோல் முற்றிலும் எரிந்து சாம்பலானதோடு, டிராக்டருக்கும் லேசான சேதம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.