புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இலவச மருத்துவ முகாம்

ஈரோடு அருகே  பேரோடு ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:35 am

DIN

ஈரோடு அருகே  பேரோடு ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 பேரோடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமை, சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.இராமலிங்கம் தொடக்கிவைத்தார்.
 வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழுவினர் பொது மருத்துவம், குழந்தைகள், பல், மகப்பேறு, சித்த மருத்துவம், மன நலம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இதில், 300 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 
 இதில், 20 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், மகளிருக்கு அம்மா குழந்தை பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.