பெருந்துறையில் பத்திர எழுத்தர்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்
ஆன்லைன் பத்திரப் பதிவில் நிலவும் குளறுபடிகளைச் சரி செய்ய வலியுறுத்தி, பெருந்துறையில் பத்திர எழுத்தர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஆன்லைன் பத்திரப் பதிவில் நிலவும் குளறுபடிகளைச் சரி செய்ய வலியுறுத்தி, பெருந்துறையில் பத்திர எழுத்தர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதில் தொழில்நுட்பக் கோளாறுகள் அதிகம் உள்ளதால் பத்திரப் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய பத்திரப் பதிவு வேலை, ஆன்லைன் மூலம் செய்வதால் 3 முதல் 4 மணி நேரமாவதாக கூறப்படுகிறது.
ஆகவே, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள பத்திர எழுத்தர்கள், நில முகவர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...