தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பெருந்துறையில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல் விளக்கக் கூட்டம்

பெருந்துறை பேரூராட்சிப் பகுதியில், பாதாளச் சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த செயல் விளக்கக் கூட்டம் பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :23 ஜூலை 2018, 7:47 am IST

பெருந்துறை பேரூராட்சிப் பகுதியில், பாதாளச் சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த செயல் விளக்கக் கூட்டம் பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவரும், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். 
அவர் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஈரோடு மாவட்டத்தில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தும் முதல் பேரூராட்சியாக பெருந்துறை பேரூராட்சியை தேர்வு செய்து அறிவித்தார். இத்திட்டத்துக்காக ரூ. 54.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் பெருகி வருவதாலும், தாழ்வான பகுதியில் வீடுகள் கட்டியவர்கள் கழிவு நீரை வெளியேற்ற முடியாத காரணத்தாலும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு 31.50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சேகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பணிக்கம்பாளையத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. கழிவு நீரைச் சுத்திகரிப்பு செய்ய நவீன தொழில்நுட்பமாகிய ஊகமஐஈஐநஉஈ ஆஐஞ தஉஅஇபஉத எனும் முறையில் சுத்தப்படுத்தப்படுகிறது. 
இறுதியாக வெளிவரும் சுமார் 29 லட்சம் சுத்திகரிக்கப்பட்ட நீரை குளம், குட்டைகளில் நிரப்பி, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்காகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம்.
 பொதுமக்களின் அன்றாட வழ்க்கைக்கு இடையூறு ஏற்படாமல், பெருந்துறை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளை பாதாள சாக்கடை திட்டத்துக்காக 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமாகப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதில், 4 இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் உந்து நிலையங்கள், தேவையான கழிவுநீர் 
இறைப்பான்களுடன் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 59.21 கி.மி. நீளத்துக்கு 150 மி.மீ. முதல் 450 மி.மீ. விட்டமுள்ள கழிவு நீர் சேகரிப்புக் குழாய்கள் பதித்து, 1932 ஆள்நுழைத் தொட்டிகள் (மேன்ஹோல்) கட்டப்பட உள்ளது. மேலும், அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 
இதில், பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கே.தங்கவேல், உதவி நிர்வாகப் பொறியளர் கே.ரவிச்சந்திரன், பெருந்துறை இன்ஃப்ராடெக்ஸ் உரிமையாளர் ஜி.சக்திவேல், ஒளிரும் ஈரோடு தலைவர் அக்னி ஸ்டீல்ஸ் சின்னசாமி, பெருந்துறை சாகர் பள்ளித் தாளாளர் சௌந்தர்ராஜன், அத்திக்கடவு - அவிநாசி திட்ட இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகபூபதி, பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் பல்லவி பரமசிவம், தமாகா ஈரோடு தெற்கு மாவட்ட 
தலைவர் வி.பி.சண்முகம், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் தெய்வசிகாமணி, பாஜக திருப்பூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் இமயம் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் 
கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி,  கருமாண்டிசெல்லிபாளையம் திமுக நகரச் செயலாளர் திருமூர்த்தி, அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயன் உள்ளிட்ட பலர் 
கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.